1. Home
  2. சமூக வழிகாட்டுதல்கள்

சமூக வழிகாட்டுதல்கள்

TikTok மூலம் உங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை ஸ்மார்ட்ஃபோனிலிருந்தே நேரடியாகப் படமெடுத்து பகிரலாம். உலகளாவிய TikTok சமூகத்தின் ஒரு பாகமாக, உங்கள் படைப்புத்திறன்மிக்க யோசனைகளை சிறிய வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தலாம், வேறுபாடுகளை வெளிப்படுத்தி பொதுவான தளத்தைக் கண்டறியலாம்.

நாங்கள் அவ்வப்போது புதுப்பிக்கும் TikTok சமூக வழிகாட்டுதல்கள் அனைத்தும் பாதுகாப்பான மற்றும் நட்பான சூழலுக்கான முக்கியமான நன்னடத்தை விதிமுறைகள் ஆகும். வழிகாட்டுதல்களை மீறுவதால் உங்கள் கணக்கு மற்றும்/அல்லது பதிவு செய்திருப்பவைஅகற்றப்படலாம். கூடுதலாக, பயனர்கள்உள்ளூர் சட்டங்களையும் பின்பற்ற வேண்டும். பொருந்தும் சட்ட விதிகள் அனுமதிக்கும் அளவில் உங்கள் பதிவுகளைக் கண்காணிக்கவும், அவற்றை உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தும் உரிமையை நாங்கள் எங்களிடம் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இச் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்குவதற்காக எங்கள் கொள்கைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கீழே கொடுக்கப்பட்டிருப்பவை உள்ளிட்ட எதை வேண்டுமானாலும் பதிவிடும், பகிரும் அல்லது விளம்பரப்படுத்தும் தளமாக TikTok செயல்படாது:

தீங்கான அல்லது ஆபத்தான பதிவுகள்

நீங்கள் TikTok-ஐப் பயன்படுத்தும் போது, உலகளாவிய சமூகம் ஒன்றில் சேர்கிறீர்கள். பிற பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது அவர்கள் தங்களைத் தாங்களே ஊறுவிளைவித்துக் கொள்ளும் பதிவுகளைப்பதிக்கக் கூடாது, அல்லது பகிர்ந்து கொள்ளக்கூடாது – அது உடல்சார், உணர்ச்சிசார், நிதிசார் அல்லது சட்ட தீங்கு என எதுவாகவும் இருக்கலாம்.

  • TikTok-ஐப் பயன்படுத்துவதிலிருந்து பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பிற குற்றவியல் அமைப்புகள் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அல்லது தனிநபர்களை ஊக்குவிக்க மற்றும் ஆதரிக்க TikTok-ஐப் பயன்படுத்த வேண்டாம்.
  • ஆபத்தான செயல்கள், சுய காயம் அல்லது தற்கொலையைச் சித்தரிக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் பதிவிடவோ, பகிரவோ அல்லது அனுப்பக் கூடாது, அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட பிறரை ஊக்குவிக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் வழங்கக்கூடாது.
  • உணவுக் குறைபாடுகளுக்கான வழிமுறைகளைச் சித்தரிக்கும், விளம்பரப்படுத்தும், ஊக்குவிக்கும் அல்லது வழங்கும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் பதிவிட, பகிர்ந்து கொள்ளஅல்லது அனுப்பக் கூடாது.
  • ஒரு குறிப்பிட்ட நபருக்கு எதிரான உடல்சார்ந்த அச்சுறுத்தல்கள் உட்பட, மற்றவர்களை மிரட்டவோ அல்லது அச்சுறுத்தவோ கூடாது.
  • ஆயுதங்கள், வெடிகுண்டுகள், மருந்துகள் அல்லது உள்ளூர்ச் சட்டங்களால் தடைசெய்யப்பட்ட வேறு ஏதேனும் தடைப் பொருட்களை விற்க அல்லது உபயோகத்தை ஊக்குவிக்கTikTok-ஐப் பயன்படுத்தக்கூடாது.
  • ஆன்லைன் சூதாட்டம் அல்லது பிற நிதித் திட்டங்களை ஊக்குவிக்கவும்அல்லது விளம்பரப்படுத்தவும்TikTok-ஐப் பயன்படுத்தக்கூடாது.
  • சட்டவிரோத நடவடிக்கைகளை உள்ளடக்கிய எந்த உள்ளடக்கத்தையும் பதிவிட, பகிர அல்லது அனுப்பக் கூடாது.

கிராஃபிக் வன்முறை அல்லது அதிர்ச்சியளிக்கும் பதிவுகள்

TikTok என்பது கிராஃபிக் வன்முறை, வன்முறை, அதிர்ச்சியளிக்கும்அல்லது கிளர்ச்சியூட்டும் பதிவுகளுக்கு இது இடமல்ல. இப் பதிவுகளை நீங்கள் உங்கள் பெற்றோர்கள் அல்லது குழந்தைகளுக்குக் காட்ட விரும்ப மாட்டீர்கள் என்றால், அதனைப் பதிவிட வேண்டாம்.

  • கிராஃபிக் வன்முறை, வன்முறை, அதிர்ச்சியூட்டும் அல்லது கிளச்சியூட்டும்உள்ளடக்கத்தைப் பதிவிடவோ, பகிரவோ அல்லது அனுப்பவோ கூடாது, அத்துடன் வன்முறைச் செயல்பாடுகளைத் தூண்டும் பிற பதிவுகளையும்வழங்கக்கூடாது.

பாகுபடுத்தும் அல்லது வெறுப்பூட்டும் பேச்சு

அனைவரும் சேர்ந்த சமூகம்தான் TikTok. பிற பயனர்களுக்கு எதிரான தாக்குதல் அல்லது வன்முறைகளைத் தூண்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை.

  • இனம், தேசியம், மதம், தேசியவாதம், கலாச்சாரம், உடல் இயலாமை, பாலியல் சார்பு, பாலினம், பாலின அடையாளம், வயது அல்லது வேறு எந்தப் பாகுபாட்டின் அடிப்படையில் ஒரு குழுவினருக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் எந்த உள்ளடக்கத்தையும் பதிவிடவோ, பகிரவோ அல்லது அனுப்பவோ கூடாது.
  • கேலிசெய்யும் அல்லது ஆத்திரமூட்டும் கருத்துகள் உள்ளிட்ட விரோதத்தைத் தூண்டும் உள்ளடக்கத்தைப் பதிவிடவோ, பகிரவோ அல்லது அனுப்பவோ கூடாது.

நிர்வாணம் அல்லது பாலியல் செயல்பாடு

நமது சமூகம் வெளிப்படையான பாலியலைத் தூண்டும் உள்ளடக்கம் அல்லது பாலியல் கிளர்ச்சியை வழங்கும் உள்ளடக்கத்தைக் காட்டுவதற்கான இடமல்ல. பொது இடங்களில் வெளியிடக்கூடாத எதையும் இங்கே பதிவிட வேண்டாம்.

  • பாலியல் தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் சுரண்டல் அல்லது பாலியல் வன்முறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும், விளம்பரப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் எந்த பதிவையும்TikTok கண்டிப்பாக தடைசெய்கிறது. அத்தகைய உள்ளடக்கத்தைப் பதிவிட வேண்டாம்.
  • வெளிப்படையான உள்ளடக்கம், பாலியல் உள்ளடக்கம் அல்லது நிர்வாணம் ஆகியவற்றைப் பதிவிடவோ, பகிரவோ அல்லது அனுப்பவோ கூடாது.
  • விபச்சாரம், தூண்டல் அல்லது வேறு எந்த வகை பாலியல் வர்த்தகத்துடன் தொடர்புடைய உள்ளடகம் எதையும் வழங்கக்கூடாது.

குழந்தைப் பாதுகாப்பில் அத்துமீறல்

குழந்தைப் பாதுகாப்பில் TikTok மிகத் தீவிர கவனத்தைச் செலுத்தும். குழந்தைகளின் மீதான பாலியல் சுரண்டல், இலக்குகள் அல்லது ஆபத்தை விளைவிக்கும் உள்ளடக்கம் இருப்பதை நாங்கள் அறிந்தால், பொருத்தமான இடங்களில் சட்டப்பூர்வ அமலாக்கத் துறையிடம் தெரிவிக்கலாம் அல்லது புகாரளிக்கலாம்.

  • மைனர்கள் உள்ள வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் அல்லது மைனர்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டும் உள்ளடக்கத்தை TikTok கண்டிப்புடன் தடைசெய்கிறது. அத்தகைய உள்ளடக்கத்தைப் பதிவிடக்கூடாது.
  • நிர்வாணம், பாலியல்சார்ந்த செயல்கள் அல்லது மைனர்களைக் கொண்ட தேவையில்லாத விஷயங்களை உள்ளடக்கிய வீடியோக்களின் அணுகலை TikTok அகற்றலாம் அல்லது கட்டுப்படுத்தலாம், அத்தகைய வீடியோக்கள் மற்றவர்களால் விரும்பத்தகாத வழிகளில் பயன்படுத்தப்படலாம்.
  • மைனர்களுடன் ஆன்லைன் டேட்டிங், பணம் பெறும் டேட்டிங், மைனரின் தனியுரிமையை மீறும் அல்லது மைனர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பிற உள்ளடக்கங்களைப் பற்றி எந்த உள்ளடக்கத்தையும் பதிவிட, பகிர அல்லது அனுப்பக் கூடாது.
  • வயது குறைந்த பயனர்களைத் தொந்தரவு செய்ய, பொது இடுகைகள் அல்லது தனிப்பட்ட செய்திகளைப் பயன்படுத்தக்கூடாது.
  • சேவை விதிமுறைகளில் மாறுபட்டதாக இருந்தால் தவிர, நீங்கள் 13 வயதிற்கு உட்பட்டிருந்தால் அல்லது, உங்கள் நாட்டில் அல்லது பிராந்தியத்தில் அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச வயதுக்கும் குறைவாக இருந்தால் இச் செயலியைப் பயன்படுத்தக்கூடாது.

துன்புறுத்தல் அல்லது இணையக் கொடுமைப்படுத்தல்

எங்கள் பயனர்களுக்கு நேர்மறையான சூழ்நிலை மற்றும் துஷ்பிரயோகம் இல்லாத அனுபவத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். உங்கள் ஊடாடல்களைச் சட்டங்கள் மற்றும் பிற பயனர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

  • மற்றவர்களைத் தொந்தரவு செய்ய, பொது இடுகைகள் மற்றும்/அல்லது தனிப்பட்ட செய்திகளைப் பயன்படுத்தக்கூடாது.
  • முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, அடையாள எண் மற்றும் கிரெடிட் கார்டு எண் போன்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம்.
  • பிறரை வேண்டுமென்றே காயப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ, அவதூறு செய்யவோ அல்லது புண்படுத்தவோ கூடாது, பிற பயனர்களும் அவ்வாறு செய்யக்கூடாது.

ஆள்மாறாட்டம், ஸ்பேம் அல்லது தவறாக வழிநடத்தும் பிற உள்ளடக்கம்

நமது சமூகம் உயர் தரமான, ஈடுபடுத்தும் உள்ளடக்கத்தை மட்டுமே வேண்டுகிறது. ஸ்பேம், போலி அல்லது தவறாக வழி நடத்தும் உள்ளடக்கம் அல்லது நடத்தை அகற்றப்படும்.

  • தவறான அடையாளங்களை உருவாக்குவதன் மூலம் மற்றொரு நபர் அல்லது நிறுவனத்தைப் போல ஆள்மாறாட்டம் செய்வது, உங்களுக்குத் தொடர்பு இல்லை என்றாலும் மற்றவர்களுடன் அல்லது நிறுவனத்துடன் உங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் காட்டி பிறரைக் குழப்புவது அல்லது பணம் சம்பாதிக்கும் வகையில் தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தைப் பதிவிடுவது போன்றவற்றைச் செய்யக்கூடாது.
  • வர்த்தகக் கருத்துகள், மற்றவர்களைப் பணியமர்த்துவது அல்லது கருத்துகளை எழுதுவது, மீண்டும் மீண்டும் உள்ளடக்கத்தைப் பகிர்வது, சங்கிலிக் கடிதங்களை அனுப்புவது, பார்வைகள், லைக்குகள் அல்லது கருத்துகளை ஊக்குவிக்க ஏமாற்றும் தகவல்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலம் செயற்கையாக ட்ராஃபிக்கை உருவாக்கக்கூடாது.

அறிவுசார் சொத்து மற்றும் பணியிட உள்ளடக்கம்

TikTok என்பது தனித்துவமான மற்றும் அசல் படைப்புத்திறன் மற்றும் வெளியீட்டுக்கான இடமாகும்.

  • பிறரின் பதிப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகளை மீறுகின்ற எந்தவொரு உள்ளடக்கத்தையும் பதிவிட, பகிர அல்லது அனுப்பக் கூடாது.
  • உங்கள் நிறுவனத்தின் உள்ளகக் கொள்கைகளை மீறும் உள்ளடக்கம் அல்லது தகவல்களைப் பதிவிடக்கூடாது.

இதர பிற தீங்குவிளைவிக்கும் செயல்பாடு

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கம் மற்றும் நடத்தைக்கும் கூடுதலாக, TikTok சேவையின் திறனைக் குறைக்கும் செயல்பாட்டை எங்கள் கொள்கைகள் தடைசெய்கின்றன.

  • TikTok-இன் அன்றாடச் செயல்களில் குறுக்கிடவோ, அதன் வலைத்தளம் அல்லது தொடர்புடைய நெட்வொர்க்குகளை ஹேக் செய்யவோ அல்லது பயனர்களின் அணுகலைத் தடுக்க அது எடுத்துள்ள நடவடிக்கைகளை மீறவோ கூடாது.
  • வைரஸ்கள், ட்ரோஜன்கள், இணைய புழுக்கள், லாஜிக் பாம்கள் அல்லது பிற தீங்கிழைக்கும் அல்லது தொழில்நுட்ப ரீதியாகத் தீங்கு விளைவிக்கக்கூடிய மற்ற பொருட்களை உள்ளடக்கிய கோப்புகளை விநியோகிக்கக்கூடாது.
  • எந்தவொரு கோப்புகள், அட்டவணைகள் அல்லது ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் TikTok-ஐ மாற்றவோ, தழுவவோ, பிரித்துப் பார்க்கவோ, பிரிக்கவோ, தொகுப்பைப் பிரிக்கவோ அல்லது அதனை அடிப்படையாகக் கொண்ட வழித் தோன்றலை உருவாக்கவோ கூடாது, மேலும் TikTok-இல் உட்பொதிந்துள்ள மூலக் குறியீடு, நெறிமுறைகள், முறைகள் அல்லது தொழில்நுட்பங்களை மறுஉருவாக்கம் செய்ய முயலக்கூடாது.
  • TikTok இலிருந்து தகவல்களைச் சேகரிக்க, தானியங்கு ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தக்கூடாது.

அருமையான சமூக உறுப்பினர்களில் ஒருவராக இருப்பதற்கும், எல்லாப் பயனர்களுக்கும் ஏற்ற பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான இடமாக தளத்தை வைக்க உங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவதற்கும் நன்றி. சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கம் எதையாவது நீங்கள் கண்டறிந்தால், அதனை மதிப்பாய்வு செய்து பொருத்தமான நடவடிக்கையை எடுக்கும் வகையில் அதைப் பற்றி புகாரளிக்கவும். வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், privacy@tiktok.com என்பதில் எங்களைத் தொடர்புகொள்ளவும்

Updated on ஏப்ரல் 16, 2019

Was this article helpful?